பல்கேரியாவில் விக்ரம் பட ஷூட்டிங் நிறைவு..!


முன்புபோல மூன்று வருடத்திற்கு ஒரு படம் என இழுத்துக்கொண்டு இருக்காமல், மளமளவென ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கும் அளவுக்கு மாறிவிட்டார் நடிகர் விக்ரம்.. தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘துருவநட்சத்திரம்’.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படம் ஸ்பை திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் விக்ரம் ரா ஏஜென்ட்டாக நடித்திருக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ரீத்து வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்றுவந்தது. விக்ரம், பார்த்திபன், ராதிகா சரத்குமார் மற்றும் சிம்ரன் நடிக்கும் இப்படத்தின் சண்டை காட்சிகள் பல்கேரியாவில் படமாக்கப்பட்டன.

ஹாலிவுட் சண்டைப்பயிற்சி கலைஞர்களால் சண்டை காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கேரியாவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவித்துள்ள கவுதம் மேனன், இதைத் தொடர்ந்து அபுதாபி, ஸ்லோவேனியா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்.

Leave a Response