வன்கொடுமைச் சட்டப்படி கமலைக் கைது செய்யவேண்டும் – எழுத்தாளர் ஆவேசம்

கமல் முன்னெடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரிரகுராம் பேசிய பேச்சுக்குக் கடும் கண்டனங்கள். இது தொடர்பாக எழுத்தாளர் யமுனாராஜேந்திரன் எழுதியுள்ள பதிவில்,

நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பிக்பாஸ் வீட்டில் தன்னுடன் உறையும் சக நடிகை ஒருவரை ‘சேரி மனப்பான்மை’ கொண்டவர் ஏன ஏசியிருக்கிறார்.

பிக்பாஸ் கமல்ஹாசன், விஜய் தொலைக்காட்சி நிர்வாகி, தமிழக செய்தித் தொடர்புத் துறை, தமிழ் திரையுலக அமைப்புகள் என்ன மயிரையா புடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்?

ஷில்பா ஷெட்டி தெரியுமா? அவர் எப்படி உலக அளவில் பேமஸ் ஆனார் தெரியுமா? பிக்பாஸ் நிகழ்வுதான் அதற்குக் காரணம். ஜோடி கூட்’ எனும் மாடல் பிக்பாஸ் நிகழ்வில் ஷில்பா ஷெட்டியை வசவினார். ‘பாக்கி, இந்தியன், சேரிவாசி, கன்ட், நாற்றம் பிடித்தவள்’ என்றெல்லாம் நிறவாத-இனவாத வசைகள். ஒருவரல்ல, ஜோடி கூடுடன் சேர்ந்து நால்வர் இந்த வசைககளில் ஈடுபட்டனர்.

பிரித்தானிய ஊடகக் கண்காணிப்பு அமைப்பான ‘ஆப்ஸ்பாம்’ நிகழச்சி ஒளிபரப்பாளரான சேனல் நான்கை கண்டித்தது. பிரித்தானிய-இந்திய அரசுகள் அதிகாரபூர்வமாகக் கண்டித்தன. ஸ்பான்சர்கள், விளம்பரதாரர்கள் தம்மை விலக்கிக் கொண்டனர். நிகழ்ச்சி முழுமையாக ரத்துச் செய்யப்பட்டது.

ஐரோப்பா தழுவிய பிரச்சினையாக இது ஆனது. ஜோடி கூட் உள்பட அனைவரும் மன்னிப்புக் கேட்டனர். சிறிது காலத்தில் ஜோடி மரணமுறவும் செய்தார். தனது நிற-இனவாத வசவுக்காக மரணத்தின் முன்பு மிகவும் வருந்தி எழுதினார். காயத்ரி ரகுராம், கமல்ஹாசன், விஜய் தொலைக்காட்சி நிர்வாகி என அனைவரும் இந்த சாதிவெறி வசவுக்காக பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். வுன்கொடுமைச் சட்டம் இவர்கள் மீது பாயவேண்டும்..

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response