சசிகுமார் நடிப்பில் வெளியான கிடாரி படத்தில் இடம்பெற்ற ‘வண்டியில நெல்லு வரும்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.. இந்தப்பாளுக்கு மிகவும் வித்தியாசமாக, அதேசமயம் துல்லாளாக இசையமைத்திருந்தார் இசையமைப்பாளர் தர்புகா சிவா.
தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கவுள்ள படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க உள்ளார்.. இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 19ம் தேதி முதல் சென்னையில் ஆரம்பமாகவுள்ளது. மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மகேஷிண்டே பிரதிக்கரம்‘ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப்படம் உருவாகிறது.