மணிரத்னம்-பாரதிராஜா வெளியிடும் கார்த்திக் சுப்புராஜ் பட இசை..!


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் நடிகர் பிரபுதேவா,. இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டநிலையில் தற்போது இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்..

பர்ஸ்ட் லுக் வெளியிடும் விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது.. இந்த விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, மற்றும் மணிரத்னம் கலந்து கொண்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளனர். படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Leave a Response