தமிழருக்கு ஒரு தலைமை வராமல் தடுக்கும் சிங்களர்கள்


முதலமைச்சரை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முயற்சி…..ஐங்கரநேசன்!!

வடமாகாண முதலமைச்சரை அரசியலில் இருந்து முற்றாக ஓரங்கட்ட வேண்டும் என பலரும் முயற்சித்து வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட குழுவின் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருநெல்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “விசாரணை குழு பக்க சார்பான முறையில் நடந்துகொண்டுள்ளது. யாருடைய நன்மைக்காக இவ்வாறு நடந்துகொண்டது என்பதில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்கள், நிதி மோசடி குற்றச்சாட்டுக்களை குறுக்கி பார்க்க வேண்டாம். 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுத்து செல்ல சிறந்த தலைவர் ஒருவர் வேண்டும்.

எனினும், அதனை தடுக்கும் நோக்கில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் குரல்கொடுத்து வருகின்றார்.

இந்நிலையில், வடமாகாண முதலமைச்சரை அரசியலில் இருந்து முற்றாக ஓரங்கட்ட வேண்டும் என பலரும் முயற்சித்து வருவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருந்த பொ.ஐங்கரநேசன் அண்மையில் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Response