கமல், சிவாஜிக்கு அடுத்தபடியாக விஜய்சேதுபதி..!


விஜய் சேதுபதி நடிப்பில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தில் கவுதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆறுமுக குமார் என்பவர் இயக்கும் இப்படத்தில் நிகரிகா கொனிடேலா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி பழங்குடியின தலைவராக நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது.

பழங்குடியின தலைவரான விஜய் சேதுபதி நகரத்துக்கு வருவதுபோல படத்தின் கதையை மையப்படுத்தியிருக்கிறார்களாம். இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதி 8 வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன் கமல் பத்து வேடங்களிலும் நடிகர் திலகம் சிவாஜி 9 வேதங்களிலும் நடித்துள்ளனர்.. விஜய் சேதுபதி நடிக்க இருபது எட்டு கெட்டப்புகளிலா அல்லது எட்டு கேரக்டர்களிலா என்பது சஸ்பென்சாக வைத்திருக்கிறார்களாம்.

Leave a Response