விதார்த்தின் வாய்ப்புகள் அதிகரிக்க ‘குரங்கு பொம்மை’ தான் காரணமாம்..!


இயக்குனர்களின் நடிகன் என்று சொல்லும் விதமாக ஒவ்வொரு படத்திலும் தன்னை படத்தின் கதாபாத்திரமாகவே மாற்றிக்கொள்பவர்தான் நடிகர் விதார்த்.. சமீபத்தில் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் அவரது நடிப்பு லேட்டஸ்ட் உதராணம். இந்தநிலையில் பாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் குரங்கு பொம்மை.

இந்த படத்தின் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கதாநாயகன் விதார்த், இந்த படத்தில் நான் நடித்திருப்பதால் எனக்கு நான்கு படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதோடு, நான் இப்போது இயக்குநர் பாரதிராஜா இயக்கும் படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஏன் இதைச்சொல்கிறேன் என்றால், இது எல்லாம் அமைய நித்திலனும் குரங்கு பொம்மையும் தான் காரணம்” என நெகிழ்வாக கூறியுள்ளார்..

Leave a Response