இனியாவது சுதாரித்துக்கொள்வாரா கௌதம் கார்த்திக்..?


சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகளுக்கு நுழைவாயில் எளிதாக திறந்துவிடுகிறது.. ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அதனை தக்கவைத்துக்கொள்பவர்கள் தான் காலம் தாண்டி நிற்கிறார்கள்.. அப்படி பல வாரிசுகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள கடும் முயற்சி எடுத்து போராடி வருகிறார்கள்.

ஆனால் மோதிரக்கையால் குட்டுப்படும் பாக்கியம் பெற்றவர் நவரச நாயகனின் மகன் கௌதம் கார்த்திக். மணிரத்னம் படத்தில் அறிமுகமான இவருக்கு அந்தப்படமும் ஓடவில்லை.. அடுத்துவந்த படங்களும் சொல்லிகொள்ளும்படியாக இல்லை..இத்தனை வருடங்களில் அவர் நடித்து எட்டு படங்களாவது ரிலேஎஸ் ஆகியிருக்க வேண்டும்.. ஆனால் மொத்தமே நான்கு படங்கள் தான் அவர் நடிப்பில் வெளியாகி இருகின்றன..

வரும் வெள்ளியன்று அவர் நடித்த ரங்கூன்’ படம் வெளியாக இருக்கிறது.. இதை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடித்துள்ள ‘இவன் தந்திரன்’ படம் வெளிவர தயாராகக உள்ளது.. இவை ஓரளவு கமர்ஷியலாக வெற்றி பெறும் பட்சத்தில் இனியாவது கௌதம் கார்த்திக் சினிமாவுக்கேற்ற நடைமுறைகளுக்கு தன்னை மாற்றிக்கொண்டு தனக்கென நிலையான இடத்தை பிடிக்க தயாராகவேண்டும்.. குறிப்பாக அவரது தந்தை கார்த்திக் நல்ல நல்ல படங்களில் நடித்திருந்தாலும் கூட, சினிமாவை மதிக்காமல் நடந்தது போல அவரது மகன் கௌதாமும் அப்படி நடக்க கூடாது என அவர் மீது பாசம் உள்ள திரையுலகினர் பலரும் அறிவுரை கூறி வருகிறார்களாம்.

Leave a Response