பிரபாஸின் ‘சாஹோ’ வியாபரத்தை 350 கோடியாக்கிய ‘பாகுபலி’ சாதனை..!


பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டமான பாகுபிலியில் கதாநாயகனாக நடிகர் பிரபாஸ் அடுத்ததாக சூஜித் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்படவுள்ள “சாஹோ” திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேளைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த சமயத்தில், பாலிவுட்டை சேர்ந்த பிரபல பாலிவுட் நிறுவனம் இப்படத்தின் அனைத்து இந்திய உரிமைகளை 350 கோடிக்கு விலைக்குக் கேட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறியுள்ளன. இந்நிலையில், படம் துவங்கும் முன்னரே கோடிக் கணக்கில் லாபத்தை ஈட்டப்போகும் படம் எனும் பெருமை சாஹோ படத்திற்குக் கிடைக்கவுள்ளது.

Leave a Response