
பாவம் நடிகர் கார்த்திக்கு மட்டும் ஏன் இந்த சோதனை என தெரியவில்லை.. கடந்த வருடம் முழுதும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ‘காற்று வெளியிடை படத்துக்காக காஷ்மீரில் கடுங்குளிரில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார்..
தற்போதோ ‘தீரன் அத்தியாயம் ஒன்று’ என்கிற படத்திற்காக வடமாநிலங்களில் நடைபெற்ற படப்பிடிப்பில் கடும் வெயிலில் சுமார் 42 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்துள்ளார் கார்த்தி.. ‘சதுரங்க வேட்டை’ புகழ் ஹெச்.வினோத் இயக்கும் இந்தப்படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் கார்த்தி.


