
‘பாகுபலி-2’ படத்தில் பிரபாசுக்கு இணையாக வில்லன் கேரக்டரில் மிரட்டியிருந்தார் பல்வாள் தேவனாக நடித்திருந்த ராணா டகுபதி. ஆனால் அவருக்கு வலது கண் பார்வை தெரியாது என்கிற அதிர்ச்சியான செய்தி இப்போது வைரலாக பரவி வருகிறது.
இத்தனைக்கும் இந்த விஷயத்தை வேறு யாரோ சொலி இது பரவவில்லை.. கடந்த வருடம் பார்வையற்றோர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரானா அவர்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தரும் விதமாக தனக்கு வலது கண் பார்வை தெரியாது என்ன்கிற விஷயத்தை அவரே நேரடியாக கூறியுள்ளார். தற்போது அவருக்கு வலது கண்ணில் பொருத்தப்பட்டுள்ளது இன்னொருவர் கொடுத்த கண், என்றாலும் அதில் பார்க்கும் திறன் இல்லையாம்.
