
கடந்த வெள்ளியன்று வெளியாகி, இந்திய சினிமாவின் முந்தைய சாதனைகளையும் முறியடித்து பெரும் சாதனைகள் செய்து வருகிறது ராஜமௌலி இயக்கிய பாகுபலி-2 படம். இந்நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் அது ஹாலிவுட் தரத்திற்கு இருப்பதாக கூறினர். இதில் ஹைலைட்டாக இந்நிலையில் பாகுபலி-2 படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்..
ரஜினிகாந்த் கூறியதாவது “இந்திய சினிமாவே பெருமைப்படும்படியான ஒரு படம் பாகுபலி. கடவுளின் குழந்தையான ராஜமௌலி மற்றும் அவரது படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார். அதற்கு பதிலளித்த ராஜமௌலி, “தலைவா.. கடவுளே என்னை வாழ்த்தியது போல இருந்தது. இதை விட எனக்கு வேறு எதுவும் பெரிதல்ல” என கூறியுள்ளார்.


