
ரஜினி நடித்த கபாலி படத்தை இயக்கியவர் பா.ரஞ்சித். அந்த படம் ஹிட்டடித்ததால் மறுபடியும் ரஜினியை வைத்து அடுத்த படம் இயக்குவதற்கான கதை வேலைகளில் பல மாதங்களாக ஈடுபட்டு வந்த டைரக்டர் ரஞ்சித், விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறார்.
இந்தப்படமும் ரஜினியின் கபாலி போலவே கேங்ஸ்டர் கதையில் உருவாகி வருவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் ரஞ்சித் தரப்பில் மீண்டும் வயதான கெட்டப்பில் நடித்தாலும், கபாலி கதைக்கும் இந்த கதைக்கும் துளியும் சம்பந்தம் இருக்காது என்கிறார்கள்.
அதோடு, பாட்ஷா படப்பிடிப்பு நடைபெற்ற மும்பை பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கப்போவதாக பரவிவரும் செய்தியிலும் உண்மையில்லை. இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ஆந்திராவிலுள்ள கடப்பா பகுதிகளில்தான் நடைபெறுகிறது. அதற்கான செட்போடும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்.


