
“ஜெயிக்கிறவனை மட்டும்தான் இந்த உலகம் மதிக்கும். நீ நல்லவனா, கெட்டவனா என்று பார்க்காது. நீ ஜெயிச்சவனா என்றுதான் பார்க்கும்” இது ஜீவன் தற்போது நடித்துள்ள ‘ஜெயிக்கிற குதிரை’ படத்துக்கு மட்டுமல்ல நீண்ட நாட்களாக படம் எதுவும் இல்லாமல் முடங்கி கிடக்கும் படத்தின் ஹீரோ ஜீவனுக்குமே நன்கு பொருந்தும்..
ஆம்.. நீண்ட நாட்கள் கழித்து ஜீவன் நடிப்பில் வெளியாகும் இந்தப்படத்தில் கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்சி அகர்வால், அஸ்வினி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். நீ நல்லவனா, கெட்டவனா என்று பார்க்காது. நீ ஜெயிச்சவனா என்றுதான் பார்க்கும். அப்படியான இந்த உலகில் நாயகன் ஜீவன் ஒரு விஷயத்தில் வெற்றியடைவதற்காக எந்த வழியை தேர்ந்தெடுத்து வெற்றி பெறுகிறார் என்பதை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்லியிருக்கிறாராம் சக்தி சிதம்பரம். இந்தப்படம் ஜீவனை ஜெயிக்கிற குதிரையாக மீண்டும் நிலைநிறுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…


