மூன்றில் ஒரு பங்கை சாட்டிலைட் உரிமையிலேயே கைப்பற்றிய ‘2.O’..!


லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.O’ படத்தின் அனைத்து மொழி தொலைக்காட்சி உரிமைகளையும் இணைத்து. 110 கோடிக்கு அனைத்து உரிமையையும் கைப்பற்றியுள்ளது ஜீ நிறுவனம். முதன்முறையாக, பாலிவுட் அல்லாத ஒரு தென்னிந்திய திரைப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 110 கோடிக்கு விலைபோயிருப்பது சாதனைதான்.

2.0 படத்தின் பட்ஜெட் 350 கோடி என்று சொல்லப்பட்டு வரும்நிலையில் படத்தின் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பகுதியை சாட்டிலைட் ரைட்ஸ் விற்பனையிலேயே திரும்ப எடுத்துவிட்டது லைகா. ஆனால், அக்சய் குமார் நடித்திருப்பதால் ஹிந்தியில் ஸ்பான்சர்சிப் அள்ளிவிடலாம் என்று எண்ணியே ஜீ நிறுவனம் இந்த படத்தை 110 கோடி கொடுத்து வாங்கியுள்ளதகவும் சொல்லப்படுகிறது.

Leave a Response