
எனக்கு அரசியல் தெரியாது என்று சொல்லிக்கொண்டே அன்மைக்காலமாக தீவிரமாக அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார் கமல், அவருடைய கருத்துகள் பார்ப்பன கருத்தியலை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது இதை வெளிப்படுத்தியதோடு அவரை பகிரங்க விவாதத்துக்கும் அழைக்கிறார் பாவலர் அறிவுமதி
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள பதிவில்
உயர்திரு கமலஹாஸன்
அவர்களை யாரும்
தவறாகப் பேசாதீர்கள்.
பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அவர் பிறந்த இனத்திற்கு
அவர் உண்மையாக உழைக்கிறார்.
அதைத்
தீக்
குச்சி
நெருப்பாக
ஏற்று
நம்
இன அரசியல் அகல்களில்
நம்பிக்கைச்
சுடர்களை
ஏற்றுவோம்
அவருக்கு
நன்றி சொல்லி!
கையலாகாதவர்களா
தமிழர்கள்?
நாகரிகத்தோடு
இரண்டாயிரம்
ஆண்டு கால
வலிகளோடு
உங்களோடு
உங்கள் இனக் கொடுமைகளை
விவாதிக்க
நாங்கள் தயார்.
நீங்கள் தயாரா கமல் அய்யா?
அழைப்பது…
மாடு மேய்க்கும் புலையன்
ந ந்தன் ஓமந்தூரார் மகன்
மூதறிஞரால் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி விவசாயத் தமிழன்்்
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யாவின் உத்தமதானபுரம் உருவாகக் கல் சுமந்த வேலைக்காரியும்்்்
தேவைப்பட்டால்
பதிற்றுப்பத்து
குமட்டூர் கண்ணனாரும்
கூட!!!!


