ஒய்.ஜி.மகேந்திரனை இப்போதும் பயமுறுத்தும் ரஜினி..!.


சீனியர் நடிகர்ளில் இன்னும் ரிட்டையர்டு ஆகாமல் துடிப்புடன் நடித்து வருபவர் ஒய்.ஜி.மகேந்திரன். சினிமா நாடகம் என இரண்டு குதிரைகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்து வருபவர். குறிப்பாக மேடை நாடகங்களை தொய்வில்லாமல் தொடர்ந்து நடித்து வருபவர்.. தற்போது பைரவா, கடம்பன், ஏஏஏ உளிட்ட சில முக்கியமான படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினியும் இவரும் உறவினர்கள் என்பதை ஆத்மார்த்த நண்பர்கள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ரஜினியின் ஆரம்பகாலப்படங்கள் பலவற்றில் ஒய்.ஜி.மகேந்திரன் தான் அவரது நண்பனாக நடித்திருப்பார்.. ஒய்.ஜி.யின் நாடகங்களுக்கு தீவிர ரசிகரான ரஜினி, என்னையும் உங்க நாடகத்துல சேர்த்துக்குங்க.. அதற்கான கதாபாத்திரத்தை ரெட் பண்ணுங்க என்று சொல்லி இருக்கிறாராம்.. அதுதான் என்னை பயமுறுத்துது என்கிறார் ஒய்.ஜி..மகேந்திரன்.

Leave a Response