‘ரெமோ’ படத்தின் பாடல்களை வெளியிட்டார் ஏ.ஆர்.ரகுமான்..!


சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அவரது பட பாடல்கள் ஆண்டவன் புண்ணியத்தால் ஹிட்டாகி விடுகின்றன.. அதற்கு இரண்டே பேர் முக்கிய காரணம்.. ஒருவர் அனிருத்.. இன்னொருவர் இசையமைப்பாளர் டி.இமான்.. இவர்கள் இருவருமே சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார்கள்..

அந்தவகையில் இந்தமுறை தான் நடித்துவரும் ‘ரெமோ’ படத்தில் அனிருத்தை கூட்டணி சேர்த்துக்கொண்டுள்ளார். இந்தப்படத்தில் அனிருத் இசையமைப்பில் ‘ரெமோ நீ காதலன்’, ‘செஞ்சிட்டாளே’, ‘சிரிக்காதே’ ஆகிய பாடல்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டு ஹிட்டும் ஆகிவிட்டன.

நள்ளிரவு 12 மணியளவில் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். முந்தைய பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு தற்போது மற்றைய பாடல்களும் கிடைத்துள்ளது. பாக்யராஜ் கண்ணன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

Leave a Response