ஐஸ்வர்யா ராஜேஷுடன் கடலை போடுவதில் ம.க.ப.ஆனந்துக்கு வந்த சிக்கல்..!


விஜய் டிவியில் ‘அது இது எது’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான ம.க.ப.ஆனந்த், இப்போது சினிமாவிலும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது ஐஸ்வர்யா ராஜேசுடன் அவர் ஜோடியாக நடித்துவரும் படம் படத்திற்கு ‘கடலை’ என டைட்டில் வைத்துள்ளார்கள். ஆனால் இப்போது அதற்கு எதிராக சிக்கல் எழுந்துள்ளது.

முதலில் இந்தப்படத்துக்கு தீபாவளி துப்பாக்கி என வைக்கப்பட டைட்டிலைத்தான் இப்போது ‘கடலை’ என மாற்றியுள்ளார்கள்.. ஆனால் ஆனந்தராஜ் என்கிற இயக்குனர் தான் ஏற்கனவே ‘கடலைபோட ஒரு பொண்ணு வேணும்’ என்கிற டைட்டிலை பதிவு செய்து, படமும் இயக்கி வருவதாகவும் இப்படி ‘கடலை’ என அவர்கள் டைட்டிலை மாற்றியது தன்னுடைய படத்தை பாதிக்கும் எனவும் கூறி போர்க்கொடி தூக்கியுள்ளார்.

ஆக இந்த உத்தமமான டைட்டில் யாருக்கு கிடைக்கப்போகிறதோ..?

Leave a Response