மாவட்டம் மாற்றி வன்னிஅரசு நியமனம் – விசிக விமர்சனம்

தமிழ்நாடு அரசின் வளர்ச்​சிப் பணி​களை வேகப்​படுத்​த​வும்,நலத்​திட்ட உதவி​களைக் கண்​காணிக்​க​வும்,அவசரகாலப் பணி​களை உடனுக்​குடன் மேற்​கொள்​ள​வும் அனைத்து மாவட்​டங்​களுக்​கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

மாவட்ட வளர்ச்​சிப் பணி​களை துரிதப்​படுத்​த​வும்,
மக்​களுக்​கான நலத்​திட்ட உதவி​களை கண்​காணிக்​க​வும், அவசர​காலப் பணி​களை உடனுக்​குடன் மேற்​கொள்​ள​வும், மாவட்ட வாரி​யாக அமைச்​சர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

அதன் விவரம்:

விழுப்​புரம், கடலூர் மாவட்​டங்​கள் – என்​.ஆனந்த்,

சென்​னை, திரு​வண்​ணா​மலை – ஆதவ் அர்​ஜு​னா,

மயி​லாடு​துறை – வெங்​கட ரமணன்,

திரு​வள்​ளூர் – ரா.கு​மார்,

திருநெல்​வேலி – மரிய​வில்​சன்,

பெரம்​பலூர் – ராஜ்மோகன்,

காஞ்​சிபுரம் – க.தென்​னரசு,

திருப்​பத்​தூர் – ஆர்​.​வி.ரஞ்​சித்​ கு​மார்,

செங்​கல்​பட்டு – த.சரத் ​கு​மார்,

கள்​ளக்​குறிச்சி – வன்​னிஅரசு,

ராணிப்​பேட்டை – வ.காந்​தி​ராஜ்

தரு​மபுரி, அரியலூர் – ப.ராஜ்கு​மார்,

நாகை – ஏ.எம்​.ஷாஜ​கான்,

தஞ்சை – வினோத்,

திருச்சி – ரமேஷ்,

கரூர் – சி.​விஜயலட்​சுமி,

நாமக்​கல் – த.லோகேஷ் தமிழ்ச்​செல்​வன்,

திருப்​பூர் – கே.ஜி.அருண்​ராஜ்,

நீல​கிரி – செ.கமலி,

வேலூர் – ம.விஜய் பாலாஜி,

ஈரோடு – கே.ஏ.செங்​கோட்டையன்

கோவை – வே.சம்​பத்​கு​மார்,

மதுரை, தேனி – நிர்​மல்​கு​மார்,

புதுக்​கோட்டை – ஜா.​முகமது பர்​வேஸ்,

சிவகங்கை – டி.கே.பிரபு,

கிருஷ்ணகிரி – எஸ்​.கீர்த்​த​னா,

விருதுநகர் – கு.ஜெகதீஸ்​வரி,

திரு​வாரூர் – பெ.​விஸ்​வ​நாதன்,

தூத்​துக்​குடி – ஶ்ரீநாத்,

இராம​நாத​புரம் – பெ.மதன்​ராஜா,

சேலம் – விஜய் தமிழன் பார்த்​திபன்,

கன்​னி​யாகுமரி – செ.​ராஜேஷ்கு​மார்,

தென்​காசி – ராஜீவ்,

திண்​டுக்​கல் – க.விக்​னேஷ்

ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

இதில்,விழுப்புரம் மாவட்ட அமைச்சர் வன்னிஅரசுவை கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்ததற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.

அவர் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது….

அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கும், ஒன்றுக்கு மேற்பட்டோர் இருந்தால் பிற மாவட்ட அமைச்சர்கள் பொறுப்பளிப்பதும் சரி,ஆனால் 7 தொகுதியுள்ள விழுப்புரம் மாவட்ட அமைச்சர் வன்னி அரசு அவர்களை 4 தொகுதியுள்ள கள்ளக்குறிச்சிக்கு நியமனம் சரியா?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Response