சிபிஎம் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதையொட்டி திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் காங்கிரசுக்கு 28, இந்திய கம்யூனிஸ்ட். 5, மதிமுக 4, முஸ்லிம் லீக் மற்றும் மமகவுக்கு தலா 2 இடங்கள் ஓதுக்கப்பட்டுள்ளன. இதர கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தக் கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கடந்தமுறை 6 தொகுதிகளில் போட்டியிட்டது.இம்முறையும் அதே தொகுதிகள் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கூட்டணிக்கு புதியகட்சிகள் வந்துள்ளதால் 5 தொகுதிகள் மட்டுமே வழங்கமுடியும் என்று திமுக தெரிவித்தது. இதனால் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்து வந்தது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் குழுவினர் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர். முடிவு எட்டப்படாத சூழலில் நேற்றும் மார்க்சிஸ்ட் குழுவினர் முதலமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும், 5 தொகுதிகள் மட்டும் ஒதுக்கமுடியும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியாகத் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவு சொல்வதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறினர்.அதேபோல் ஆலோசனை நடத்தினர்.அதன் முடிவில், 5 தொகுதிகளை ஏற்றுக்கொள்ள இசைந்தனர்.அதைத் தொடர்ந்து, நேற்று இரவு மார்க்சிஸ்ட் கட்சியினர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றனர்.

அங்கு,2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் சண்முகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

2021 தேர்தலில், இதே கூட்டணியில், மதுரை தெற்கு,திண்டுக்கல்,திருப்பூர் வடக்கு,கோவை வடக்கு,
கீழ்வேளூர் (தனி),கந்தர்வகோட்டை (தனி) ஆகிய 6 தொகுதிகளில், மதுரை தெற்கு, திண்டுக்கல், திருப்பூர் வடக்கு, கோவை வடக்கு, கீழ்வேளூர், கந்தர்வகோட்டை ஆகிய இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதுரை தெற்கு தொகுதியைத் தவிர மற்ற 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

Leave a Response