
எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது.ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் 15.18 விழுக்காடு வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் திருத்தப் பணிகளுக்கு முன் 6,41,14,587 வாக்காளர்கள் இருந்தனர்.இப்போது திருத்தப் பணிகளுக்கு பின் 5,43,76,755 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 2,66,63,233 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 2,77,60,332 பெண் வாக்காளர்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4,19,355; மூன்றாம் பாலினத்தவர் 7,191 பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
தமிழ்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் 66,44,881 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்
அந்தந்த வாக்குச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பி.எல்.ஓ.க்களை அணுகலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்குச்சாவடி வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
12 இலட்சம் பேர் வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்களை திரும்பி அளிக்க விரும்பவில்லை.
சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் அதிக வாக்காளர்கள் நீக்கம்.
எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் நாளை இணையத்தில் வெளியிடப்படும். அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் நாளை தங்களது பெயரை சரிபார்த்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இவ்வாறு கூறியுள்ளார்.
சுமார் ஒரு கோடி வாக்குகள் குறைந்துள்ளதால் தமிழ்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


