தமிழீழ கால்பந்து அணி உலகக்கோப்பை வென்றது – சீமான் மகிழ்ச்சி

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையான கோனிஃபா கால்பந்து விளையாட்டின் இறுதிப்போட்டியில் கிழக்கு துர்கெஸ்தான் அணியைத் தோற்கடித்து தமிழீழ கால்பந்து அணி கோப்பையை வென்றுள்ளது.

இது அளவில்லா மகிழ்ச்சி அளிக்கிறது என நாம் தமிழர் கட்சிச் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

மிகச்சிறப்பாக விளையாடி கோப்பை வென்றுள்ள தமிழீழ கால்பந்து அணியினருக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

புலம்பெயர்ந்து வாழ நேர்ந்த போதிலும், தங்களுடைய அயராத முயற்சியாலும், கடின உழைப்பாலும் கிடைக்கும் வாய்ப்புகளில், தமிழ்ப்பிள்ளைகள் சாதனை புரிவது ஒன்றுதான் நம் இனத்தின் வலியை, உலகின் முன் உரக்க மொழிவதற்கும் ஈழத்தாயகம் விடுதலை பெறுவதற்குமான வலிமையான வழியாகும்.

அந்த வகையில் இரண்டாவது முறையாக தமிழீழ கால்பந்தாட்ட அணி பெற்றுள்ள வெற்றி பெருமிதம் கொள்ளச்செய்கிறது.

அணிவீரர்கள் அனைவருக்கும்,பயிற்சியாளருக்கும் என்னுடைய அன்பையும், பாராட்டுகளையும், தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழீழ கால்பந்து அணி மேலும் பல பதக்கங்கள் வென்று சாதனைபுரிய என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response