ஒரு மாதத்துக்கும் மேலாக அமைச்சர் துரைக்கண்ணு வீட்டைக் கண்காணிக்கும் காவல்துறை – அதிரவைக்கும் செய்தி

கொரோனா தொற்றால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான அமைச்சர் துரைக்கண்ணு, சிகிச்சை பலனின்றி அக்டோபர் 31 ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் உயிரிழந்தார்.

அவர் மரணத்துக்குப் பின் அவரிடம் கோடிக்கணக்கான பணம் கொடுத்து வைக்கப்பட்டிருந்ததென்றும் அதை மீட்க தமிழக முதல்வர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முயல்கிறார் என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இதுகுறித்து தற்போது உலாவரும் செய்தி….

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு இறந்ததால் அவரிடம், மாவட்டத்தில் தொகுதிகளை பலப்படுத்த ஆளும்கட்சி கொடுத்த 800 கோடி என்ன ஆனது என தெரியவில்லை. இதுபற்றி இரகசிய விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையிலிருந்து 17 பேர் கொண்ட போலீஸ் குழு வந்து 2 பிரிவுகளாகப் பிரிந்து கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் மப்டியில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

துரைக்கண்ணுவிடம் தொகுதியைப் பலப்படுத்த கட்சித் தலைமை அவரிடம் கொடுத்தது ரூ800 கோடி அல்ல தொகுதிக்கு ரூ500 கோடி என 4 தொகுதிக்கு 2000 கோடி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அதிமுகவினர் கூறியதாவது: தொகுதியைப் பலப்படுத்த ஒரு தொகுதிக்கு ரூ200 கோடி கொடுத்ததாகக் கூறப்பட்டது உண்மையில்லை. ஒரு தொகுதிக்கு ரூ500 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பணத்தைத் துரைக்கண்ணுவிடம் கொடுத்த போதே கட்சி ரீதியானது என்பதால் துரைக்கண்ணுவிடம் உரிய ஆவணத்தில் தலைமை கையெழுத்துப் பெற்ற பின்னரே கொடுத்ததாம். இது வெளியில் தெரிந்தால் பூகம்பம் வெடிக்கும் என வெளியில் சொல்லவில்லையாம்.

இந்நிலையில் துரைக்கண்ணு இறந்ததால் அவரது உடலை ஒப்படைக்க முடியாது. பணத்தைக் கொடுத்தால் தான் ஒப்படைக்க முடியும் என கட்சித் தலைமை கறாராகக் கூறிவிட்டதாம். இதனால் துரைக்கண்ணுவின் மகன் ஐயப்பன் வேறுவழியின்றி, முதல்கட்டமாக ரூ800 கோடியைக் கொடுத்துள்ளார். அதன்பின்னர் தான் உடலைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ₹2 ஆயிரம் கோடியில் கால் பங்கு தான் வசூலாகி உள்ளதாம். மீதிப் பணத்தை வசூலிக்கவே கட்சி தலைமை சிறப்பு போலீஸ் குழுவை அனுப்பி உள்ளூர் போலீசார் உதவியை நாடாமல் விசாரித்து வருகின்றனராம்.

எப்ஐஆர் போடாமல் போலீசார் நேரடியாக விசாரிக்க்க மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுத்ததால் தான் ஸ்பெஷல் டீம் குழுக்களாக தனித்தனியாக பிரிந்து மப்டியில் சென்று துரைக்கண்ணுவுக்கு எங்கெல்லாம் சொத்துகள் உள்ளன, பணம் எங்கெங்கு கைமாறியது, யார், யாரிடம் பணம் உள்ளது என கடந்த ஒரு மாதமாகக் கண்காணித்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் துரைக்கண்ணுவின் மகன் ஐயப்பன் கபிஸ்தலம் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளாராம். துரைக்கண்ணு இருந்தபோதே ஐயப்பன் கபிஸ்தலத்தில் உள்ள அரசு சுற்றுலா விடுதியில தங்கி நிர்வாகிகளுடன் ஆலோசிப்பது, பேசுவது என இருந்து வந்தார். துரைக்கண்ணு இறந்த பின்னரும் அவர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூட, அவர் நிர்வாகிகளை அழைத்து அங்கு ரகசிய ஆலோசனை நடத்தினாராம். இதில் எதுபற்றி ஆலோசனை நடத்தினார்கள் என ஸ்பெஷல் டீம் இரகசியமாக விசாரித்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அங்கு நடக்கும் நிகழ்வுகள் திரைப்படங்களில் வரும் காட்சி போல அதிர வைப்பதாக உள்ளது என்றும் அவர்கள் சொல்கிறார்களாம்.

Leave a Response