
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (டிசம்பர் 2019) 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது.
மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியிடங்களும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களும், 9,624 ஊராட்சி தலைவர் பதவி இடங்களும், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும்.
முதல் கட்டத் தேர்தலில் 76.19 சதவீத வாக்குகளும், இரண்டாவது கட்டத் தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவாயின.
ஓட்டு எண்ணிக்கை 315 மையங்களில் நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தொடக்கம் முதலே திமுக கூட்டணி அதிக இடங்களைப் பிடித்து முன்னிலை வகித்து வருகிறது.
இரவு 12 மணி நிலவரம்:
முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவை:
ஊராட்சி ஒன்றியம்: 1950/5090
திமுக 860,
அதிமுக 665,
இதர 274
காங்கிரஸ் 49
தேமுதிக 44
சிபிஐ 26
பாஜக 25
சிபிஎம் 10
மாவட்ட கவுன்சில்:34/ 515
திமுக 20
அதிமுக 9
சிபிஐ 02
சிபிஎம் 01
பாஜக 01
பல இடங்களில் திமுக வெற்றி பெற்றதை அறிவிக்காமல் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.


