
குஜராத்தில் முதல் கட்டமாக நடந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றியது.பிறகு இரண்டாம் கட்டமாக நடந்த தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை காங்கிரஸ் இழந்தது.
இதற்கு முக்கிய காரணம்,காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானோடு நட்புறவு கொண்டு என்னை அழிக்கப் பார்த்தார்கள் என்ற மோடி சொன்ன பெரும் பொய்யை இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த தொகுதிகளின் மக்கள் அப்படியே நம்பி விட்டார்கள்.தான் தோற்கப் போகிறோம் என்று தெரிந்ததும் மோடி ஒரு பொய்யான பெரிய அஸ்திரத்தை எடுத்து விட்டார்.
குஜராத் பாகிஸ்தானுக்கு மிக அருகில் உள்ள மாநிலம். அந்த மக்கள் இறையாண்மை சென்டிமென்டுக்கு இரையாகி விட்டார்கள்.இதற்கு மணிசங்கர் அய்யரும் ஒரு காரணம். வலுவாகப் பேசாமல், காங்கிரஸ் தோற்றால், அதற்கு காரணம் இதுவாகக் கூட இருக்கலாம். தோல்விக்கு நான்கூட காரணமாகலாம் என்று தோல்விக்கு வழிகாட்டினார்.
ராகுல் இதற்குப் பிறகாவது பார்ப்பனர்களின் சகவாசம் எந்தளவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று புரிந்து கொண்டால் சரி.
கூட இருந்து குழி பறிக்கும் வேலையை காலங்காலமாக பார்ப்பனர்கள் செய்து வருபவர்கள் என்ற வரலாறை காங்கிரஸ்காரர்கள் சரியாகப் புரிந்து கொண்டால் தோல்விகளைத் தவிர்க்கலாம்.


