
பல ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம்தான் பிரபலமடைந்தார் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் சமூக வலைதளங்களில் புகைப்படம், வீடியோ பதிவிட்டு வருகிறார். அவர் எப்போது அடுத்த படம் நடிப்பார் என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் ராகவா லாரன்சின் காஞ்சனா 3 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’ ஆகிய பேய்ப் படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் வசூலை அள்ளியவர் இயக்குநர் லாரன்ஸ்.
தற்போது ‘காஞ்சனா 3’ படத்துக்குத் தயாராகிவிட்டார் லாரன்ஸ். இதிலும் தானே நடித்து, இயக்க முடிவு செய்துள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் நிழ்ச்சி மூலம் வரவேற்பைப் பெற்ற ஓவியா இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்டோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர இன்னும் சில படங்களிலும் ஓவியா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் அவை பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும் என்றும் சொல்லப்படுகிறது.


