
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து திமுக அரியலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் எழுதியிருக்கும் கருத்து…
“பிக்பாஸ் பத்தி எழுதல அண்ணா. விடமாட்டோம்”, அப்படின்னு தங்கை தேவிகமல் போட்ட ஸ்டேட்டஸில் பல கமெண்ட்கள்.
”கிட்னிய எடுத்துடுவாங்க, தப்பிச்சிடுங்க” அப்படின்னு அண்ணன் கே.என்.சிவராமன் அலர்ட் பண்றார்.
“இன்னும் சங்கத்ல சேர்த்தல”னு ஓரண்டை இழுக்கிறார் காளிதாஸ் சேகர்.
“இதுக்கு மேலயும் மௌனமாக இருந்தால் ஓவியா வெறியர்கள் 9 கோடி பேர்.. உங்கள் வீட்டை முற்றுகையிடுவோம்..”, அப்படிங்கறார் காஜா மொய்தீன்.
பிரச்சினை என்னன்னா, நான் பிக்பாஸ் பார்க்கல, பார்க்க நேரம் இல்ல. தொடர்ந்து ஏதாவது சுத்திக்கிட்டு இருக்கறதனால, வாய்ப்பு கிடைக்கலன்னும் வச்சிக்கலாம்.
ஆனா முகநூல் மூலமா ஒரு விஷயம் தெரிய வருது.
பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கற பங்கேற்பாளர்கள்ல, நடிகை ஓவியாவுக்கு ஆதரவு அதிகரிக்குது.
பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கறவங்க, ஓவியாவுக்கு எதிர்ப்பு, ஆனா வீட்டுக்கு வெளியில் இருக்கறவங்க ஓவியாவுக்கு ஆதரவு.
வாழ்க்கையும் இது தான்.
சுத்தி இருக்கறவன், அனுபவிச்சவன், பொறாமைல கீழ இறக்கத் தான் நினைப்பான். தூர நிக்கறவங்க தான் அருமை உணர்ந்து ஆதரிப்பாங்க. ஓவியாவுக்கும் அது தான் நடக்குது போல.
நாட்டில் நடக்கும் மத்திய அரசுக் கொடுமை, மாநில அரசுக் கொடுமை எல்லாம் தாங்காம தான், மக்கள் பிக்பாஸ் பார்த்து பொழுது போக்குறாங்க. அதப் பத்தி கமெண்ட் அடிக்கறாங்க.
ஓவியா இடத்தில் தங்களை பொறுத்திப் பார்த்துக்கறாங்க.
காயத்ரியின் ஆணவம், ஜுலியின் நடிப்பு, சினேகனின் நாடகம், இன்ன பிறர்களின் ஆதிக்க உணர்வு எல்லாம் அவர்களுக்கு எதிராகவே திரும்புகிறது என எண்ணுகிறேன்.
அதனால் தான், ஓவியாவாக மெல்ல மாறுகிறார்கள் மக்கள்.
“பார், மக்கள் மெல்ல, மெல்ல ஓவியாவாக மாறுவதைப் பார்”னு, பிக்பாஸ், மக்களிடம் சொல்லும் காட்சி தான் அரங்கேற வேண்டும் இனி.
தேவிகமல், காளிதாஸ் சேகர், காஜாமொய்தீன் எல்லாம் தங்களை ஓவியாவா உணர்றாங்க.
உள்ளூர் அரசியலில் ஓவியாவாகவே உணர்கிறேன், நானும்


