விஜய்சேதுபதிக்கு மாதவன் கொடுத்த நற்சான்றிதழ்..!


‘ஓரம்போ’ படத்தின் மூலம் சினிமாவில் இரட்டை இயக்குனர்களாக அடியெடுத்து வைத்த புஷ்கர்-காயத்ரி, மாதவன்-விஜய்சேதுபதி இருவரையும் இணைத்து ‘விக்ரம் வேதா’ என்கிற படத்தை ஒன்றை இயக்கி வருகிறார்கள். விஜய்சேதுபதி இதில் தாதாவாகவும் மாதவன் இதில் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.

போலீஸ் என்றால் ஒரு கெட்டவனை எதிர்க்கும் சாதாரண போலீஸ் கதாபாத்திரம் இது கிடையாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வித்தியாசமாக மாதவனின் போலீஸ் கதாபாத்திரம் இருக்குமாம். உடன் நடித்த விஜய்சேதுபதி பற்றி மாதவன் கூறும்போது, “விஜய் சேதுபதி எனக்கு தம்பி மாதிரி. அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல. சிறந்த மனிதரும் கூட. படத்தில் நாங்கள் எதிரெதிர் துருவங்கள் போல இருப்பதாக தெரியும். ஆனால் படப்பிடிப்புக்கு வெளியே எப்போதும் ஜோக்கடித்துக் கொண்டு, சிரித்துக் கொண்டுதான் இருப்போம்.” என கூறியுள்ளார்.

Leave a Response