“நாங்களும் அதே கூட்டம் தான்” ; விக்னேஷ் சிவன் கொண்டாட்டம்..!


சமீபத்தில் பல இயற்கை தடைகளை தாண்டி வெளியான சூர்யாவின் சி-3’ படம் அமோக வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.. சூர்யா-ஹரி இருவரும் கூட்டணி சேர்ந்தால், அதுவும் சிங்கம் போன்ற அதிரடி போலீஸ் கதைகள என்றால் நிச்சயம் வெற்றி என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளது இந்தப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு..

இந்த வெற்றிக்கு கைமாறாக, இயக்குனர் ஹரியை கௌரவப்படுத்தும் விதமாக அவருக்கு ஒரு விலையுயர்ந்த காரை பரிசளித்துள்ளார் சூர்யா.. ‘சி-3’ டீம் மட்டுமல்லாது சூர்யா தற்போது நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படக்குழுவினரும் இந்த வெற்றியை கொண்டாடியுள்ளார்கள்.. இந்தப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் “நாங்களும் அதே கூட்டம் தான் சார்” என படத்தின் வெற்றிக்களிப்பில் இணைந்துள்ளார்.

Leave a Response