நட்டி நட்ராஜின் இரட்டை வேடம் அம்பலம்..!


ஒளிப்பதிவாளராக மட்டுமின்றி நடிகராகவும் கலக்கி வருபவர் நாட்டி என்கிற நட்ராஜ் சுப்ரமணியம்.. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ‘சந்துரங்க வேட்டை’ படம் அவரை இன்னும் பிரபலமாக்கியது.. தற்போது ரஜினியின் பாடல் வரியான ‘எங்கிட்ட்ட மோததே’ மற்றும் ‘பொங்கு’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்..

அடுத்ததாக நட்டி நடிக்கும் படத்திற்கு ‘கெட்ட பையன் சார் இவன்’ என டைட்டில் வைத்துள்ளார்கள். இதுவும் ‘காளி’ படத்தில் ரஜினி பேசிய பேமஸ் டயலாக் தான். அறிமுக இயக்குனர் தீபக் என்பவர் இயக்கும்இந்தப்படத்தில் நட்டி டபுள் ஆக்சன் ரோலில் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Leave a Response