இத்தனை வருடங்களில் பலவிதமான கேரக்டர்களில் நடித்துவிட்ட பிரகாஷ்ராஜ் இதுவரை தான் நடிக்காத கேரக்டர்கள் தேடிவந்தால் அதை விடுவதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருக்கிறார். அப்படி அவரை தேடிவந்த கேரக்டர் தான் அவர் இதுவரை நடிக்காத பாதிரியார் கேரக்டர்.. கௌதம் ராமச்சந்திரன் என்பவர் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின்பாலி தமிழில் நடிக்கும் படத்தில் தான் பிரகாஷ்ராஜுக்கு இந்த கேரக்டர் தரப்பட்டுள்ளது..
திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி பின்னணியில் உருவாகும் இந்தப்படம் ஏற்கனவே கன்னடத்தில் வெளியான ‘உள்ளிடவரு கண்டந்தே’ என்கிற படத்தின் ரீமேக் தான். நிவின்பாலிக்கு ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத் என்பவர் நடிக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் ‘சதுரங்க வேட்டை’ ஹீரோ ‘நட்டி’ நட்ராஜ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக ‘கள்ளப்படம்’ லட்சுமி பிரியா நடிக்கிறார்.