
முன்னணி நடிகைகளில் நிறைய பேர் தாங்கள் நடிக்கும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை.. குறிப்பாக நயன்தாரா தான் நடித்தது யார் படமாக இருந்தாலும் அந்தப்படம் சம்பந்தமான புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்..
கார்த்தி நடித்து தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘காஷ்மோரா’ படத்தின் ஆடியோ ரிலீஸ், பிரஸ்மீட் என அனைத்திலும் ஆப்சென்ட் தான்.. இந்த பிரஸ்மீட்டின் போது நடிகர் விவேக் தான் பேசும்போது இதுபற்றி குறிப்பிட்டு நயன்தாராவையும் அவரைப்போல விழாவிற்கு வராமல் டிமிக்கி கொடுக்கும் சில நடிகைகளையும் போகிற போக்கில் கிண்டலடித்ததுடன் மறைமுக அட்வைஸும் கொடுத்தார்..
அவர் பேச்சிலிருந்தே அதை கேளுங்களேன்.. “இப்போவெல்லாம் சில நடிகைகள் தங்களது படம் சம்பந்தமான எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வது இல்லை. நயன்தாரா மட்டுமல்ல, பல நடிகைகளும் நாங்கள் விழாவுக்கு வந்தால் செண்டிமெண்டாக படத்திற்கு ஏதாவது பிரச்சனை வரும்.. படம் ஓடாமல் போய்விடும் என்கிற காரணத்தை தான் சொல்கிறார்கள்..
அதேபோல, அனைத்து நடிகைகளும் தயாரிப்பாளர்களிடம் எங்களுக்கு கடைசியாக கொடுக்கும் பேமண்ட்டை தரவேண்டாம்.. அதை நாங்கள் வாங்காவிட்டால் சென்டிமென்ட்டாக படம் நன்றாக ஓடும் என சொன்னார்கள் என்றால் நன்றாக இருக்கும்.. தயாரிப்பாளருக்கும் மிச்சம்.. அப்படி யாரவது செய்வார்களா..?” என குத்தலாக கேட்டார்.


