அங்கொன்றும் இங்கொன்றுமாக சாதாரண வேடங்களில் நடித்த தன்ஷிகா, பேராண்மை, அதை தொடர்ந்து பாலாவின் ‘பரதேசி’ படங்களுக்குப்பின் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.. ஆனால் ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடிக்கும் பொன்னான வாய்ப்பு தன்ஷிகாவுக்கு கிடைத்தது இல்லையா..? அதிலிருந்து அவரது ரேஞ்சே மாறிவிட்டது.
நிறைய படங்களில் நடித்து வருகிறார் தன்ஷிகா.. ஆனால் நீண்ட நாட்களுக்கு முன்பே சமுத்திரகனியுடன் அவர் நடிப்பதாக ஒப்ப்புக்கொண்ட படம் மட்டும் அப்படியே பாதியில் நிற்கிறது.. காரணம் அவரது தலைமுடி தான். ஆம். ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதே அரிது என்பதால் அந்த படத்தை விட மனமில்லாமல் முடியை கட் பண்ணவேண்டும் என டைரக்டர் சமுத்திரகனியிடம் சொன்ன போது அவரும் பெருந்தன்மையுடன் சம்மதம் கொடுத்தார்.
ஆனால் கபாலி படம் வெளியாகி பல மாதங்களானபோதும் தன்ஷிகாவின் தலையில் இன்னும் எதிர்பார்த்தபடி அளவு முடி வளரவில்லை. சமீபத்தில்கூட தன்ஷிகாவை அழைத்து தலைமுடி எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதை பார்த்தாராம் சமுத்திரகனி. அப்போது இன்னும் வளர வேண்டும் என்று சொல்லிவிட்டு, அதற்குள் அப்பா’ படத்தின் ரீமேக் வேலைகளை முடித்துவிடலாம் என .முடிவெடுத்துள்ளாராம்.