சமுத்திரகனியின் புதிய குருநாதர் இவர் தான்..!


பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘நிமிர்’ என்கிற படத்தில் உதயநிதி நடித்துள்ளார், கதாநாயகிகளாக நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு டர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.

இது தமிழில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள 7வது படம். 36 நாட்களில் படத்தை ஒரே கட்டமாக முடித்துள்ளார்கள் என்பது ஹைலைட். ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உதயநிதி பேசியதாவது,

இந்த நிகழ்வில் பேசிய சமுத்திரகனி, “இயக்குனர் பிரியதர்ஷன் சார் ஒரு நாள் அவரே என்னை அழைத்து இந்தப்படத்தில் நானும் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். வசனமும் என்னை எழுத சொன்னார். ஆனால் வசனம் நான் எழுதவில்லை. அவர் தான் உண்மையில் எழுதியிருக்கிறார். பெருந்தன்மையாக என் பெயரை போட்டிருக்கிறார். பாலச்சந்தர் மறைவிற்கு பிறகு இன்னொரு குருநாதர் எனக்கு கிடைத்திருக்கிறார்” என கூறினார்..

Leave a Response