ஜெயலலிதாவுக்கு நுரையீரலில் நோய்த்தொற்று – அப்பல்லோ அறிக்கை, அவருக்குக் கிருமி செலுத்தப்பட்டிருக்கலாம் – தமிழச்சி பகீர்

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். முதல்வருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். லண்டன் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பிலே கடந்த 30-ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு எம்ய்ஸ் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் முதல்வருக்கு நேற்று சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி சுப்பையா விசுவநாதன் வியாழனன்று வெளியிட்ட இரண்டு பக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருகிறது.

முதல்வருக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், செயற்கை சுவாசம் மற்றும் அதனுடன் இணைந்த இதர சிகிச்சைகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப்பிரிவு நிபுணர்கள், இதய சிகிச்சை நிபுணர்கள், சுவாச சிகிச்சை நிபுணர்கள், நோய்த் தொற்று சிகிச்சை சிறப்பு நிபுணர்கள், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் முதல்வர் இருந்து வருகிறார். இந்த குழுவினரால் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எய்மஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதிஷ் நாயக் ஆகியோர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு நேற்றுமுன்தினம் அப்போலோ மருத்துவ நிபுணர் குழுவினருடன் இணைந்து முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.

எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் முதல்வரை பரிசோதித்ததுடன் தற்போது அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சைகளைத் தொடரவும் ஒப்புதல் அளித்தனர். இக்குழுவினர் அக்டோபர் 7-ம் தேதிவரை (இன்று) தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

கடந்த மாதம் 30-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவை பரிசோதித்த லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்டு ஜான்பீலே அக்டோபர் 6-ம் தேதி (நேற்று) சிகிச்சை குறித்து மீண்டும் ஆய்வு செய்தார்.

முதல்வருக்கு இருக்கும் சர்க்கரை நோய், குளிர்காலத்தில் ஏற்படும் மூச்சுக்குழல் அழற்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டும் மருத்துவர்களின் தொடர் ஆலோசனைகள், மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையிலும் அப்போலோ மருத்துவ நிபுணர்கள் குழுவினர் விரிவான மருத்துவ சிகிச்சைத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். தற்போது முதல்வருக்கு செயற்கை சுவாசம், நுரையீரலில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றுக்கான மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், ஊட்டச்சத்துகள், பொது மருத்துவ சிகிச்சை மற்றும் இதர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

முதல்வருக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் தொடர்வதுடன், அவர் மருத்துவமனையில் நீண்டநாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்பதே முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ நிபுணர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியானதும் ஜெயலலிதா உடல்நலம் பற்றி பல்வேறு தகவல்களைச் சொல்லி வழக்குக்கு ஆட்பட்டிருக்கும் பிரான்ஸ் தமிழச்சி தன்னுடைய முகநூலில் எழுதிய பதிவில்,

சில நாட்களாக ‘ஜெயலலிதா அப்பலோவில் தலைமறைவு’ என்று எழுத ஆரம்பித்த பிறகு இன்று வேறு விதமான தகவலை அப்பலோ கூறுகிறது. இந்த உண்மையை வரவழிப்பதற்கு தான் தலைமறைவு கதை.
செப்டம்பர் 22 அன்று இரவு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, ‘சாதாரண காய்ச்சல் இரண்டு நாட்களில் வந்துவிடுவார்’ என்று அறிவித்த அப்பலோ இன்று ‘முதல்வர் ஜெயலலிதா நீண்டநாள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும்’ என்று கூறுகிறது. இதுவும் பொய். மக்களை சமாதானப்படுத்துவதற்கான அறிக்கை.
முதன்முறையாக எனக்கு கிடைத்த தகவல்படி ஜெயலலிதா உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டன. கோமா நிலையில் உள்ளார். மூளைச்சாவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இதற்கு பிறகு சில தினங்களில் இலண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பியல் வரவழிக்கப்படுகிறார். இவர் உறுப்புகள் செயலிழப்பு, நோய்த்தொற்று, மூளைச்ச்சாவு இவற்றில் வல்லுனர். இதனோடு Sepsis நோய்க்கு ஸ்பெஷலிஸ்ட். இவரை ஏன் ஜெயலலிதா உடல்நிலையை பரிசோதிக்க அழைக்க வேண்டும்? அப்படியானால் ஜெயலலிதா உடல்நிலை மேற்குறிப்பிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதா?
இவை எல்லாவற்றையும் விட எந்த கட்டத்தில் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது அவரருகே யார் இருந்தார்கள்?
ராம்குமார் செப்டம்பர் 19 இல் சிறைக்குள் கொல்லப்படுகிறார். அதற்கு பிறகு செப்டம்பர் 20, 21 இல் யார் ஜெயலலிதாவுடன் நேரடியாகவோ தொலைபேசி வழியாகவோ தொடர்புக்கு வந்தார்கள்? அவர்கள் ஜெயலலிதாவிடம் என்ன பேசினார்கள்? டெல்லியில் இருந்து தொலைபேசி வந்ததாகவும் அதிலிருந்து ஜெயலலிதா மனஉளைச்சலில் இருந்ததாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது.
சுவாதி படுகொலை பின்னணியில் இயங்கும் அரசியல் எது என்று ஜெயலலிதாவுக்கு தெரிந்தே இருந்தது. ஒப்புக்கு ராம்குமார் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியும். ஆனால் சிறைக்குள் ராம்குமார் கொல்லப்படுவதில் இணக்கமாக ஜெயலலிதா இருந்திருக்க மாட்டார் என வைத்துக் கொள்வோம். அவரை மீறி ஆர்.எஸ்.எஸ் திட்டம் நடத்தப்பட்டு விடுகிறது.
தமிழ்நாட்டு அரசியலுக்குள் ராம்குமார் சிறைக்குள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தன் அரசியலுக்கு நெருக்கடி ஏற்படுத்தி விடுமோ என்ற பதட்டம். இன்னொரு புறம் தன் அதிகாரம் பறிக்கப்படுகிறதோ என்ற எண்ணம். ஊழல் வழக்கு விசாரணைகளை மையப்படுத்தி தொடர்ந்து மிரட்டலுக்குட்பட்டு அதிலும் வீம்பாக ஜெயலலிதா இருந்திருந்தால் அடுத்தக் கட்டம் எப்படி நகர்ந்திருக்கக் கூடும்?
சென்னை முக்கிய காவல்துறையினருடன் அன்று இரவு மீட்டிங்கில் இருந்திருக்கிறார் ஜெயலலிதா. உடன் சசிகலா. அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் உடலில் ஏன் Sepsis கிருமி ஜெயலலிதாவுக்கு செலுத்தப்பட்டிருக்கலாம் தானே?
இத்தனை சந்தேகம் ஏன்?
ஜெயலலிதா 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்தும் தமிழக கவர்னர், மந்திரிகள், எம்.பிக்கள், அரசு அதிகாரிகள் உட்பட யாருமே ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லையே! ஏன்?
சசிகலா மட்டுமே ஜெயலலிதா அறைக்குள் சென்று வருகிறார். இந்தளவுக்கு சசிகலாவுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? சசிகலா யாருக்காக வேலை செய்கிறார்?
இந்த சந்தேகம் ஏன் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படவில்லை?
#தமிழச்சி
07/10/2016

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Response