
இப்போதைக்கு காமெடி நடிகர்களில் சூரி பிஸியாக இருப்பதால் அவரை பிடிக்க முடியாதவர்கள் எல்லாம் தேடி ஓடுவது காமெடி நடிகர் சதீஷைத்தான்.. போதாக்குறைக்கு விஜய்யுடன் கத்தி’ படத்தில் நடித்த சதீஷ் இப்போது அவருடன் இணைந்து ‘பைரவா’ படத்திலும் நடித்து வருவதால், அடுத்த முன்னணி காமெடியனாக பார்ம் ஆகிவிட்டார். சொல்லிக்கொள்கிற மாதிரி ஒரு காமெடி ஹிட் கொடுத்துவிட்டால் போதும்.
அந்தவகையில் வரும் ஆயுதபூஜை ரிலீஸாக வெளியாக இருக்கும் றெக்க, ரெமோ, தேவி என மூன்று படங்களிலும் சதீஷ் தான் காமெடியனாக நடித்திருக்கிறார்.. ஒரு காமெடி நடிகர் நடித்த மூன்று படங்கள் ஒரே நாளில் வெளியாவது எப்போதாவது நடக்கும் விஷயம்.. அது வளரும் நடிகரான சதீஷுக்கு நடப்பதை பார்க்கும்போது அவரது முன்னேற்றம் நன்றாகவே தெரிகிறது.


