
கடந்த இரண்டு வருடங்களாக தமன்னா நடித்துவரும் படங்களை டுத்துக்கொண்டாள் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களை மட்டுமே அவர் ஏற்பதை காணலாம்.. சும்மா டூயட் பாடிவிட்டு போகும் கதாநாயகியாக அவர் தொடரவில்லை என்பதும் புரியும்.. அந்தவகையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா ஜோடியாக அவர் நடித்துள்ள ‘தேவி’ படமும் அவரை இன்னொரு தளத்துக்கு எடுத்துச்செல்லும் என்பதை சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபுதேவா பேசியதை வைத்து உறுதி செய்யலாம்.
தமன்னா ஒரு நாள் கேரவனில் உட்கார்ந்து அழுதுகொண்டு இருந்தாராம்., காரணம் அவ்வளவு பிரஷர். தமிழ், தெலுங்கு, இந்தின்னு மூணு மொழிகள்லயும் அவங்க பேசி நடிக்கணும். இயக்குனர் விஜய்கிட்ட கேள்வி கேட்டு, கேள்வி கேட்டு அந்தக் கதாபாத்திரத்தை எப்படி சிறப்பா செய்ய முடியும்னு யோசிச்சிக்கிட்டே இருப்பாராம்.
“இந்தப் படத்துல ஒரு பாட்டுக்கு அவங்க ஆடிய டான்ஸ் அவ்வளவு சிறப்பா இருக்கும். 20 நாள் அதுக்கு ரிகர்சல் பார்த்தோம். ஆனால், இரண்டு நாள் வந்துட்டு மூணாவது நாள் அவங்க வரலை. போன் பண்ணால், மாஸ்டர் கை வலி, முதுகு வலி இன்னைக்கு ஒரு நாள் என்னை விட்டுடங்கன்னு கேட்டாங்க. ஆனால், அப்புறம் 15 நாள் ரிகர்சல் வந்து அந்தப் பாட்டுல நடிச்சாங்க. அதுக்கு காரணம் எல்லாமே தமன்னாதான்” என புகழ்ந்துள்ளார் பிரபுதேவா.


