ஆண்டவன் கட்டளை விஜய்சேதுபதிக்கு தொடர் வெற்றியாக அமையுமா..?


இந்த 2016 ஆம் வருடம் விஜய்சேதுபதிக்கு அமோகமான அறுவடை என்று சொல்லும் அளவுக்கு அவரது படங்கள் தொடர் வெற்றியை குவித்துவருகின்றன. ஒருவேளை வெற்றிபெறும் படங்களின் சூட்சுமத்தை கண்டுகொண்டாரோ என்னவோ..? இந்த வருட ஆரம்பத்தில் வெளியான ‘நானும் ரவுடி தான்’, ‘சேதுபதி’ மற்றும் ‘தர்மதுரை’ மூன்றுமே வெற்றிப்படங்களாக அமைந்துவிட்டன.

இப்போது விஜய்சேதுபதிக்கு அதுவே மிகப்பெரிய சவாலாக முன்னே நிற்கிறது.. காரணம் வரும் வெள்ளியன்று அவர் நடித்த ஆண்டவன் கட்டளை’ படம் வெளியாகிறது.. இதுநாள் வரை அரசால் புரசலாகா, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆக்சன் காட்சிகளில் நடித்துவந்த விஜய்செதுபதிக்கு இது முழு நீள ஆக்சன் படமாக தயாராகியிருக்கிறது.

அதேபோல காக்காமுட்டை, குற்றமே தண்டனை என சாப்ட் கார்னர் படங்களாக இயக்கிய இயக்குனர் மணிகண்டனுக்கும் இது புதிய களம் என்பதால் அவரது சேஞ்ச் ஓவரையும் ரசிகர்கள் தரிசிக்க ஆவலாக இருக்கிறார்கள்.. படத்தின் கதாநாயகியாக ‘இறுதிச்சுற்று’ புகழ் ரித்திகாசிங் நடித்திருப்பது இன்னொரு ஸ்பெஷல்.

Leave a Response