
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இதுவரை நேரடி தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. மற்ற தெலுங்கு நடிகர்களைப்போல அவரது படம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவில்லை (அருந்ததி கூட அனுஷ்காவுக்காகத்தான் தமிழில் வெளியானது).. ஆனால் அதேசமயம் மலையாளத்தில் டப்பிங் படங்கள் மூலம் காலூன்றிய ஒரே நடிகர் இவர் மட்டுமே..
பின் ஏன் தமிழுக்கு முயற்சிக்கவில்லையாம்.. காரணம் டப்பிங் படங்கள் மூலமாக அல்லாது நேரடி தமிழ்ப்படம் மூலமாகவே தமிழில் அறிமுகமாக விரும்பினார் அல்லு அர்ஜுன்.. அந்தவகையில் கடந்த 10 வருடங்களாக தமிழில் அறிமுகமாவதற்காக நல்ல கதையை தேடிக்கொண்டு இருந்தார் அல்லு அர்ஜுன்..
என்னதான் ஆந்திராவில் வெற்றிகளை பெற்றாலும் நாம் பிறந்து வளர்ந்த ஊரில் ஜெயிக்கிறோம் என்றால் அதுதானே கிக் என்கிறார் அல்லு அர்ஜுன்.. ஆம்.. பிறந்து வளர்ந்து, படித்து என 20 வருடங்கள் இருந்தது தமிழ்நாட்டில் தான்.. அதனால் தான் தமிழ், தெலுங்கு இரண்டுக்குமே செட்டாகும் கதை ஒன்றை தேடிவந்தாராம்.
அப்படிப்பட்ட கதை இப்போது இயக்குனர் லிங்குசாமி மூலமாக அவரை தமிழுக்கு அழைத்துவந்துள்ளது. இந்தப்படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த அறிவிப்பை அல்லு அர்ஜுனை வரவழைத்து, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது..

