
ஒருகாலத்தில் லிங்குசாமி படங்கள் என்றால் படம் பார்க்க வரும் ரசிகனுக்கு செமத்தியான தீனி கிடைக்கும்.. ஆனால் வேட்டை, அஞ்சான் ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த பெயரை கெடுத்துக்கொண்டார் லிங்குசாமி. இந்தநிலையில் தான் தனது இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படமான சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்தார்.
அதன் முதற்கட்டமாக இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு தொடங்கியுள்ளது. லிங்குசாமி இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராஜ்கிரணும் தனது முதல் பாக்க கேரக்டரை இதிலும் தொடர்கிறார்.
சக்தி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சென்னை பின்னி மில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.6 கோடி செலவில் பிரமாண்ட அளவில் செட் அமைக்கப்பட்டுள்ளது.


