‘கபாலி’ படம் வெளியானபின் ‘கபாலி’ படத்திற்கு வரவேற்பில்லை’.. ‘கபாலி’ சரியாக போகவில்லை’ என்று வெளியான எந்த செய்திக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினி மதிப்பு கொடுக்கவில்லை.. காரணம் உண்மை நிலவரம் அவருக்கு தெரியும்.. வெறும் இரண்டே படங்களை மட்டும் இயக்கிய, ரஞ்சித்திற்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு ‘கபாலி’யில் கிடைத்ததே ஆச்சர்யம் என்றால், அதைவிட ரஜினிக்கு பிடித்தமான இயக்குனராக ‘கபாலி’ இயக்குனர் பா.ரஞ்சித்தும் மாறியதுதான் மிகப்பெரிய ஆச்சர்யம்.
இப்போது ரஜினியின் அடுத்த படத்தையும் ரஞ்சித்தே இயக்கப்போகிறார் என வெளியாகியுள்ள செய்தி அதை இன்னும் உறுதிப்படுத்துகிறது. இது உண்மைதான்.. இந்த தகவலை ரஜினியின் மருமகன் தனுஷே வெளியிட்டுள்ளார். ரஜினி பட அறிவிப்பை தனுஷ் வெளியிடுவானேன்..? விஷயம் இருக்கிறது.. ஏனென்றால் அந்தப்படத்தை தயாரிக்கப்போவதே தனுஷ் தானே..? அப்படியானால், சூர்யாவின் படத்தை தனுஷ் இயக்க இருப்பதாக சொல்லப்பட்டது..? அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.