சுவாதியின் கொலை சம்பவம் ஏற்கனவே தயாரான படத்தில் இடம்பெற்ற அதிசயம்..!


சமீபத்தில் தமிழ்நாட்டை அதிகம் உலுக்கிய கொலைவழக்கு என்றால் அது ஐ.டி நிறுவனத்தில் வேலைசெய்த, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலைசெய்யப்பட்ட சுவாதியின் மரணம் தான். இதன்பின் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டதும், அவர் உண்மையை ஒப்புக்கொண்டார் என்றும், இல்லையில்லை ராம்குமார் கொலையாளி அல்ல, அவரை வேண்டுமென்றே சிக்கவைத்து விட்டார்கள், உண்மையான கொலையாளி வேறு ஒருவர் என்கிற ரீதியில் பல செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதை மையமாக வைத்து இனிமேல் சில இயக்குனர்கள் படம் கூட எடுத்தாலும் எடுப்பார்கள் என கிண்டலாக கூட சொல்லப்பட்டு வந்தது. காரணம் பல கோழை வழக்குகள் அப்படித்தான் சினிமாவாக மாறியிருக்கின்றன. ஆனால் சுவாதியின் விஷயத்தில் அது அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது.

காரணம் ‘காக்கா முட்டை’ மணிகண்டன் கடந்த வருடமே இயக்கி முடித்து தற்போது ரிலீஸுக்கு தயாராக காத்திருக்கும் ‘குற்றமே தண்டனை’ படத்தின் கதையும் சுவாதியின் கொலை நிகழ்வும் அதில் அடங்கியுள்ள மர்ம முடிச்சுகளும் கிட்டத்தட்ட ஒரேபோல இருப்பதாக அந்தப்படத்தை பார்த்தவர்கள் சொல்கின்றார்கள். இதனால் அந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பு இரு மடங்காகி இருக்கிறதாம்.

Leave a Response