கமலை தொடர்ந்து பார்த்திபனுக்கும் விருது..!


கடந்த சில தினங்களாக கமலுக்கு செவாலியே விருது கிடைத்ததை திரையுலகத்தினரும் ரசிகர்களும் உற்சாக மனநிலையில் கொண்டாடி வருகிறார்கள். இந்த சந்தோஷத்துடன் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கும் அமெரிக்காவில் இருந்து அமைப்பு ஒன்று விருது வழங்கியுள்ளது இன்னும் மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இயங்கிவரும் Rocheston Accreditation Institute என்ற அமைப்பு, கடந்த வாரம் அவரது சினிமா சாதனையை பாராட்டி ‘Distinguished director’ என்ற விருதினை வழங்கியிருக்கிறது. பார்த்திபனின் சினிமா படைப்புகளை வெகுவாக பாராட்டி மிக நீண்ட பாராட்டுரையுடன் இந்த பெருமையை அவருக்கு அளித்துள்ளது அந்த அமைப்பு.

கமலுக்கு பிரான்ஸ் என்றால் பார்த்திபனுக்கு அமெரிக்கா.. கமலுக்கு கடலை உருண்டை கிடைத்தது என்றால் பார்த்திபனுக்கு கிடைத்து எள்ளுருண்டை.. ஆமாம். பார்த்திபனே தனக்கு கிடைத்த இந்த விருதை “ஏழைக்கேற்ற எள்ளுருண்டை” என தமாஷாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response