
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு, புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர்.
இரண்டகங்களால் பாதிக்கப்பட்ட இருவரும் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் நிலையில் அவரது அணி சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை மருத்துவர் இராமதாசு அறிவித்துள்ளார்.
அதன் விவரம்…
சேலம் மேற்கு தொகுதியில் மாநில இணைப் பொதுச் செயலாளர் அருள் (தற்போது சட்டமன்ற உறுப்பினர்),
வந்தவாசி (தனி) தொகுதியில் மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர், கும்பகோணம் தொகுதியில்
மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ம.க.ஸ்டாலின், விருத்தாசலம் தொகுதியில் மாவட்டச் செயலாளர் சுரேஷ்,
மயிலாடுதுறை தொகுதியில் மாவட்டச் செயலாளர் பாக்கம் சக்திவேல் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 3 வேட்பாளர்கள் அன்புமணி வேட்பாளர்களுடன் மோதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மேற்கு பாமக (அன்புமணி) வேட்பாளர் மு.கார்த்தியை எதிர்த்து சேலம் அருள் சமஉ, விருத்தாசலத்தில் தமிழரசி ஆதிமுலத்தை எதிர்த்து சுரேஷ், மயிலாடுதுறையில் சித்தமல்லி பழனிசாமியை எதிர்த்து பாக்கம் சக்திவேல் ஆகியோர் மருத்துவர் இராமதாசு தரப்பு பாமக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.
