இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 5 வேட்பாளர்கள் – விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணி​யில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சிக்கு ஒதுக்​கப்​பட்ட 5 தொகு​தி​களுக்​கான வேட்​பாளர்​களை கட்​சி​யின் தமிழ்நாடு செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் அறி​வித்​தார்.

அதன்​படி, திருத்​துறைப்​பூண்​டி​யில் க.மாரி​முத்​து, தளி தொகு​தி​யில் டி.​ராமச்​சந்​திரன், பவானி​சாகரில்
பி.எல்​.சுந்​தரம், திருப்​பூர் வடக்கு தொகு​தி​யில் ரவி (எ) எம். சுப்​பிரமணி​யம், ஸ்ரீவில்​லிபுத்​தூரில் பி.ம​காலிங்​கம் ஆகியோர் வேட்​பாளர்​களாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். கதிர்​அரி​வாள் சின்​னத்​தில் இவர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர்.

இவர்களில் டி.​ராமச்​சந்​திரன் மற்​றும் க.மாரி​முத்து ஆகியோர் ஏற்​கெனவே தளி மற்​றும் திருத்​துறைப்​பூண்​டி​ சட்டமன்ற உறுப்பினர்க​ளாக உள்​ளனர்.

ரவிக்​கும், பி.எல்​.சுந்​தரத்​துக்​கும் கடந்தமுறை போட்​டி​யிட்ட அதேதொகு​தி​களில் மீண்​டும்​
வாய்ப்​பளிக்​கப்​பட்​டுள்​ளது.

வேட்​பாளர் அறி​விப்​புக்கு பின் செய்​தி​யாளர்​களிடம் மு.வீர​பாண்​டியன் கூறுகை​யில்…

தி​முக​விடம் நாங்​கள் கேட்ட 5 தொகு​தி​கள் கிடைக்​கபெற்ற நிலை​யில், மாநிலக் குழு, மாவட்​டக் ​குழுக்
கூட்​டங்​களைக் கூட்டி வேட்​பாளர்​களைத் தேர்வு செய்து ஒருமனதாக அறி​வித்​துள்​ளோம்​.

இவர்​கள் ஐவரும் கட்​சி​யின் மாணவர் அமைப்​பு,இளைஞர் அமைப்​பு​களில் பணிபுரிந்​தவர்​கள். இந்தச் சட்​டப்​பேரவைத் தேர்​தலில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி போட்​டி​யிடும் ஐந்து தொகு​தி​களி​லும்​ நிச்​சய​மாக வெற்​றி​பெறு​வோம் இவ்வாறு அவர் கூறி​னார்.

Leave a Response