அதிமுக கூட்டணியில் சேர 400 கோடி பேரம் – சீமான் திடுக்கிடும் தகவல்

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது….

தேர்தலில் அனுமதி பெறாமல் பரப்புரை செய்ததற்காகவும், குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து பரப்புரை செய்ததற்காகவும் வழக்குப்பதிவு செய்தார்கள்.

திமுக மீது ஆளுநரிடம் அதிமுக கொடுத்த ஊழல் குற்றச்சாட்டு, தேர்தல் வரும்போது, வழக்கமாக நடைபெறக்கூடிய வாடிக்கையான ஒன்று‌. திருவிழாக்களில் நடக்கும் நாடகம் போன்று குற்றச்சாட்டுகளைப் பார்த்து இரசித்துச் சிரித்து விட்டுச்செல்வதுதான்.

பாமக அன்புமணிக்கு அதிமுக கூட்டணியில் இணைய மட்டுமே வாய்ப்பு உள்ளதால் இணைந்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் 234 தொகுதிகளுக்கும் முழுமையான வேட்பாளர்கள் பட்டியலை வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் அறிவிப்போம்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்திற்குச் செல்லத் தேவையில்லை. கரூரில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும், விஜய்யை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவரப்படவில்லை. அவரை சிபிஐ விசாரிப்பதில் குற்றமில்லை. இதை வைத்து கருத்து எதுவும் சொல்ல முடியாது.

ஜனநாயகன் படத்தில் மத ரீதியாகக் காட்சிகள் இருந்தால் அதை நீக்கிவிட்டு அனுமதி வழங்கலாம்.

இவ்வாறு சீமான் கூறினார்.

அதைத் தொடர்ந்து, கடந்த தேர்தலில் 40 தொகுதி, 400 கோடி ரூபாய் தருவதாக அழைத்தும் கூட்டணிக்குச் செல்லவில்லை என நேற்றைய கூட்டத்தில் நீங்கள் பேசியிருந்தீர்களே என்ற செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு, ஆம், அதிமுக, பாஜக தான் கூட்டணிக்கு அழைத்தார்கள் என்றார்.

பணம் தருவதாகச் சொன்னார்களா? எனக் கேட்டதற்கு,அது இப்போ இல்லை.அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நிற்கிறேன்.வேண்டாம் எனச் சொன்ன பிறகு யார் அழைத்தால் என்ன?

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Leave a Response