அதிமுக 54 ஆவது ஆண்டு தொடக்கம் – சசிகலா அழைப்பு

1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட கட்சி அதிமுக.இவ்வாண்டு அக்டோபர் 17 ஆம் தேதி 53 ஆண்டுகளை நிறைவு செய்து 54 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது அக்கட்சி.

அது தொடர்பாக,சசிகலா தரப்பின் கழகப் பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 54 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு வருகின்ற 17.10.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வாணக்கண்காடு கிராமத்தில் உள்ள மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு நடைபெறவுள்ள கழக ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.அச்சமயம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஏழை எளிய நலிவுற்ற மக்களுக்கு நல்த்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

இந்த சிறப்புக்குரிய நிகழ்ச்சியில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் வழிவந்த கழகத் தொண்டர்களும் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் ஜாதி மத பேதமின்றி அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response