இசைக்கலைஞனுக்கு எந்த அரசும் பாராட்டுவிழா நடத்தியதில்லை – இளையராஜா பெருமிதம்

தமிழ்நாடு அரசு சார்​பில், இசை​ஞானி இளை​ய​ராஜா​வின் இசைப் பயண பொன்​விழா ஆண்​டையொட்டி ‘ராஜா​வைத் தாலாட்​டும் தென்​றல்’ என்ற தலைப்​பில் பாராட்டு விழா சென்னை நேரு உள் விளை​யாட்​டரங்​கில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர்​ மு.க.ஸ்டா​லின் தலை​மை​யில் நடை​பெற்​றது.

​விழா​வில் ஏற்​புரையாற்றி இளையராஜா பேசி​ய​தாவது…..

இசை உலக வரலாற்​றிலேயே முதல் முறை​யாக ஒரு இசை அமைப்​பாள​ருக்குப் பாராட்டு விழா நடத்​து​வது தமிழ்நாடு அரசு தான். முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின் அவர்​கள், நான் சிம்​பொனி இசை அரங்​கேற்​றம்
செய்​யப்​போகிறேன் என்ற உடன் அதற்கு முதல்​நாளே வந்து வாழ்த்துத் தெரிவித்து வழியனுப்​பி​னார். இலண்​டனில் இருந்து திரும்பி வந்​த​போது அரசு சார்​பில் வரவேற்​றார். தற்​போது பாராட்டு விழா​வும் நடத்​தி​விட்​டார். இதை
என்​னால் நம்ப முடிய​வில்​லை.

என்​மேல் அவ்​வளவு அன்பு வைப்​ப​தற்கு என்ன காரணம், இசை​தா​னா?, அவரது அப்பா முன்​னாள் முதல்மைச்சர் கலைஞர் சூட்​டிய இசை​ஞானி என்ற பட்​டமே எனக்கு பேராகி​விட்​டது. அரசு சார்​பில் எந்த இசைக்​கலைஞனுக்​கும் பராட்டு விழா நடந்​தது இல்​லை. இது இசை உலகின் சரித்​திர​மாக கருதுகிறேன். இதை என்​னால் இன்​னும்
நம்ப முடிய​விலலை. என்ன பேச வேண்​டும் என்​பதே மறந்​து​விட்​டது.

இசை​யிலேயே என் வாழ்க்கை முழு​வதும் சென்​றது. என்​னுடைய குழந்​தைகளுக்​காக நான் நேரம் செல​வழிக்​க​வில்​லை.அப்​படி நேரம் செல​வழித்​திருந்​தால் இந்த சிம்​பொனியை அமைத்​திருக்க முடி​யாது. இதே​போல நீங்​கள் விரும்பிக் கேட்​கின்ற அவ்​வளவு பாடல்​களை​யும் கம்​போஸ் செய்​திருக்க முடி​யாது. அதனால், நான் எனது
பிள்​ளை​களுக்கு நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன். சிம்​பொனி அமைக்​கும்​போது எந்தச் சாயலும் இருக்​கக் கூடாது. அதை​யும் மீறி 35 நாட்​களில் இந்த சிம்​பொனியை அமைத்​திருக்​கிறேன். சிம்​பொனிக்​காக எனது வாழ்க்​கையை
அர்ப்​பணித்​தேன். சிம்​பொனி இசையை பெரிய மைதானத்​தில் நடத்த தேவை​யான உதவி​களை முதலமைச்சர்​
செய்​ய வேண்​டும்​.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response