ஒன்றிய அரசு தநா அரசு கல்விக் கொள்கை- முக்கிய வேறுபாடுகள்

ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்தது.

அதை வடிவமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022 இல் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, கல்விக் கொள்கைக்கான 520 பக்க வரைவு அறிக்கையை 2023 அக்டோபரில் வடிவமைத்தனர்.அந்த அறிக்கையை 2024 ஜூலை 1 இல் சமர்ப்பித்தனர்.

இந்​நிலை​யில், சென்னை கோட்​டூர்​புரம் அண்ணா நூற்​றாண்டு நூல​கத்​தில் பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், பள்​ளிக் கல்விக்​கான தமிழ்​நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்மைச்சர் மு.க.ஸ்டா​லின் வெளி​யிட்​டார்.

அதில் இடம்​பெற்​றுள்ள முக்​கிய அம்​சங்​கள்….

ஒவ்​வொரு மாணவரும் நம்​பிக்​கை​யுடன் இரு மொழிகளைப் பேச, படிக்க, எழுத வைப்​பதே முதன்மை நோக்​கம். தமிழ்​நாடு தமிழ் கற்​றல் சட்ட விதி​களின்படி, மாணவர்​கள் கூடு​தலாக தம் தாய்​மொழியைக் கற்க வாய்ப்பு வழங்க வேண்​டும்.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்​டாய தேர்ச்சி முறையை உறு​தி​செய்ய வேண்​டும். அதே​நேரம், ஆண்டு இறு​தித் தேர்​வுகளின் அடிப்​படை​யில் இல்​லாமல் திறன் அடிப்​படையி​லான மதிப்​பீட்டு முறை​களின்​படி தேர்ச்சி இருக்க வேண்​டும்.

10, 12 ஆம் வகுப்​பு​களுக்கு பொதுத் தேர்​வு​களை தொடர்ந்து நடத்த வேண்​டும். மாணவர் நலன் கரு​தி, பதினொன்றாம் வகுப்​புக்கான பொதுத் தேர்வு இரத்து செய்​யப்​படு​கிறது.

பள்ளிகளில் 1, 2, 3 ஆம் வகுப்பு மாணவர்​கள் வயதுக்​கேற்ப படித்​தல், எழுதுதல், எண்​ணறிவு திறன்​களை அடைவதை உறுதி செய்ய இயக்​கம் சார் திட்​டம் செயல்​படுத்​தப்​படும். மாணவர்​களின் திறன்​கள் தொடர்​பான
தரவு​களைச் சேகரிக்க, பள்​ளி​களில் 3, 5, 8-ம் வகுப்​பு​களுக்கு தொடர் இடைவெளி​களில் மாநில அளவி​லான கற்​றல் அடைவு (ஸ்​லாஸ்) தேர்வு நடத்​தப்​படும்.

அடிப்​படை எழுத்​தறி​வு, எண்​ணறிவு திட்​டத்​தின் விளைவு​களை மதிப்​பிட​வும், இந்தத் திட்​டத்​தில் உரிய
மாற்​றங்​களைக் கொண்​டு​வர​வும், 3 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை மூன்றாம் நபர் மதிப்​பீடு மேற்​கொள்​ளப்​படும்.

மாணவர்​கள் எளி​தில் அணுகும் வகை​யில் பாடப்புத்​தகங்​களை மாற்ற வேண்​டும். கற்​றலில் பின்​தங்​கிய
மாணவர்​களை அடை​யாளம் கண்​டு, அவர்​களுக்குக் குறைதீர்வு கற்​பித்​தலை வழங்கி வயதுக்​கேற்ற வகுப்பு நிலைக்கு கொண்டு வரப்​படு​வார்​கள். முதல் தலை​முறை கற்​போர், பழங்​குடி​யினர், பெண் குழந்​தைகளை பள்​ளி​யில் தக்​கவைக்​க​வும், அவர்​களது கற்​றல் விளைவு​களை முன்​னேற்​ற​வும் முயற்சி மேற்​கொள்​ளப்​படும்.

பாகு​பாடு, பாலின அடிப்​படையி​லான வன்​முறை, முடி​வெடுக்​கும் திறன் போன்ற வாழ்க்​கைத் திறன் சார்ந்த சமூக சவால்​களை எதிர்​கொள்​ளும் வகை​யில் வளர்​இளம் பரு​வத்​தினர் சரி​யானவற்றைத் தெரிந்​தவர்​களாக, நெகிழ்​வுத்​தன்மை உடைய​வர்​களாக, திறன் பெற்​றவர்​களாக வளரத் தேவை​யான கலைத் திட்​டம் இணைக்​கப்​படும்.

புலம்​பெயர்ந்​தோர், பழங்​குடி​யினக் குழந்​தைகளுக்கு இரு​மொழிக் கல்வி வளங்​களை வழங்​கு​வதன் மூலம்
அவர்​களது கற்​றல் இடைவெளியைக் குறைக்​கலாம் என்பது உள்ளிட்ட அம்சங்களும் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

தொடக்க நிலை முதல் மேல்நிலை வகுப்புகள் வரை குறைந்தபட்சம் வாரத்துக்கு 2 உடற்கல்வி பாடவேளை கள் இருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். பாரம்பரிய, நவீன விளையாட்டுகளை இணைக்கவேண்டும். அதில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்க வேண்டும்.

மனப்பாடம் அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை விட்டு, பாடக் கருத்துகளை புரிந்து கொள்ளுதல், சிந்தனைத் திறன், பெற்ற அறிவை புதிய சூழல்களில் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மதிப்பீட்டு முறைக்கு மாறவேண்டும்.

‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டத்தின் கீழ் வட்டார அளவில் சிறந்த 500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, மாதிரி பள்ளிபோல கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் கல்விக்கொள்கைக்கும் தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கைக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள்…

ஒன்றிய அரசு, 3,5,8,10,11,12 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்று சொல்கிறது தமிழ்நாடு அரசோ பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்கிறது..

ஒன்றிய அரசு,3,5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டால் மறுதேர்வு கட்டாயம் என்கிறது.தமிழ்நாடு அரசு, எட்டாம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி என்று சொல்கிறது.

ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்தவேண்டும் என்று சொல்கிறது.தமிழ்நாடு அரசு இருமொழிக்கொள்கைதான் என்பதில் உறுதியாக இருக்கிறது.

க்ல்வி பொதுப்பட்டியலில் நீடிக்கும் என்று ஒன்றிய அரசு சொல்கிறது கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது.

ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும் வயது 6 என்று ஒன்றிய அரசு சொல்கிறது.ஐந்து வயதில் முதல்வகுப்பில் சேர்க்கலாம் என்று தமிழ்நாடு அரசு சொல்கிறது.

இவற்றோடு நீட் தேர்வு கூடாது,தொடக்க நிலை முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் வழிக் கல்வியை வழங்குதல்,பள்ளிக் கல்விகளில் தமிழை முதல்மொழியாக முன்னிறுத்துதல் உட்பட பல அம்சங்கள் தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

Leave a Response